குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, August 8, 2008

வண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை

வாங்க வாங்க! நலமா? :)

குழந்தைகளுக்கான படக்கதைகளில் என்னுடைய இரண்டாம் முயற்சி.....

'டைகரின் பிறந்தநாள்'.

அதற்கு முன், வண்டு-சிண்டு அறிமுகப்பகுதியைப் புதிய குழந்தைகளுக்காகவும், உங்களுக்காவும் இன்னொருமுறை பார்ப்போமா? யாரு வண்டு, யாரு சிண்டு-னு இன்னோருவாட்டி தெரிஞ்சுப்போமே :)

வண்டு-சிண்டு அறிமுகம் இங்கே

இப்ப, 'டைகரின் பிறந்தநாள்'.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:





அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:




*************************************************************************************
கதை கேட்டதும் என் பிள்ளையுடனான உரையாடல்:

பிள்ளை: (very seriously) Mom! why is vandu crying? :(
நான் : வண்டுக்கு வயிறு வலிக்குது. அதான் அழறான்.

பிள்ளை: (thinking very deeply). But why is he crying? :(
நான் : நெறைய சாக்லேட் சாப்பிட்டதுனால வயிறு வலிக்குது.அதான் வண்டு அழுது.

பிள்ளை: (seriously) But why did he eat loads of them? :(
நான் : நிறைய சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு வண்டுக்குத் தெரியல அதான்.

பிள்ளை: But why didn't, tiger and chindu tell him, not to eat loads of choclates?
நான் : ம்ம்ம்....சிண்டும், டைகரும் அப்போ அங்க இல்ல. எல்லாரும் வேற ரூம்ல இருந்தாங்க. அதனால யாரும் வண்டு சாக்லேட் சாப்பிடறதப் பாக்கல..

பிள்ளை: (more seriuosly) Oh mom! but, why is vandu crying and why did he eat so much choclates?
நான் : ............................................

*************************************************************************************

கதை கேட்டதும் உங்கள் கருத்துகளுடன், உங்களுடன் கதை கேட்ட குழந்தைகளின் கேள்விகளையும், கருத்துகளையும் சேர்த்து பின்னூட்டமிட்டால், மேலும் மகிழ்வேன்.

தொடர்ந்து கதை கேட்க வாங்க. இதே கதையையும் , முந்தையக் கதைகளையும் அடுத்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை, மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும், குழந்தைகள் கேட்கும்வரை, இங்கே வந்து, அவர்களுக்கும் காட்டுங்கள்.

ஒரு புதிய கதையுடன் ஆகஸ்ட் 23, 2008-ல் உங்களை, சந்திக்கிறேன். மகிழ்ச்சி. :)

பி.கு.: ஒரு மூன்றரை வாரத்துக்கு புதுவண்டு வீட்டவிட்டு எஸ்கேப் ஆகப்போகுது. ஆனா, வண்டு சிண்டு கதை கண்டிப்பா சொன்ன நேரத்துக்கு வரும் :).


பின்னூட்டம் பார்க்கவும் அப்போ அப்போ புதுவண்டு பறந்து வரும். அதுவரைக்கும் எல்லாரும் உங்க வலைப்பூவோட என் வலைப்பூவையும் சேர்த்து பத்திரமாப் பாத்துக்குங்க. ஆமா! சொல்லிட்டேன் :P :)))).

முதல் கதை: இது என்ன கலாட்டா?

32 Comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்... இரண்டு கதையும் சூப்பரா இருக்கு! புது வண்டுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!

நிஜமா நல்லவன் said...

குழந்தைகள் இப்போ சாக்லேட் தான் அதிகம் விரும்பி சாப்பிடுறாங்க. வண்டு சிண்டு கதை மூலமா சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாதுன்னு அருமையா சொல்லி இருக்கீங்க....நல்லா இருக்கு.

cheena (சீனா) said...

ஹேய் புது வண்டு - அருமை அருமை - கதை அருமை - கதை சொன்ன விதமும் குரல் மாற்றமும் அருமை. பையனுக்குப் பதில் சொல்ல முடிய வில்லையா ? ஹா ஹா ஹா ஹா

//ம்ம்ம்....வண்டும், டைகரும் அப்போ அங்க இல்ல. //

வண்டல்ல சிண்டு என்றிருக்க வேண்டும்.

//பி.கு.: ஒரு 31/2 வாரத்துக்கு புதுவண்டு வீட்டவிட்டு என்கேப் ஆகப்போகுது. //

31/2 வாரம - அல்ல அல்ல - 3 1/2 வாரம்

என்கேப் அல்ல அல்ல - எஸ்கேப்

நல்வாழ்த்துகள் புது வண்டே !

NewBee said...

வாங்க தமிழ் பிரியன்,

நலமா? :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க்க்க்க்க்க மகிழ்ச்சி :)

தொடர்ந்து வாங்க.முடிந்தால் தெரிந்த குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். நன்றி :)))

NewBee said...

வாங்க நி.ந.,

நலமா? :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. :)

பி.கு.:பிரதீஷ்வர் பார்த்தாரா இதை? அவருக்கும் உங்களுக்கும் நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து வாங்க. நன்றி :)))

NewBee said...

வாங்க வாங்க சீனா ஸார்,

நலமா? :)

நீங்கள் சொன்ன எல்லா வேலையும் செய்துட்டேன். எனக்கு எத்தனை ஸ்டார் தருவீங்க? :P.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

பி.கு.:இந்த முறையும் தங்ஸ் எஸ் ஆகிடாங்களா?. அதெல்லாம் முடியாது. வந்து பாத்து, கருத்து சொல்லச் சொல்லுங்க. ப்ளீஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். :P :D

செல்விஷங்கர் said...

இந்தச் சாக்லேட் விளையாட்டுக்கெல்லாம் நாங்க வல்லே ! குட்டியா இருந்துகிட்டு எவ்ளோ சாக்லேட் திங்கறது ? ஒழுங்கா சொன்ன பேச்சுக் கேக்கணும் !தெரியுமா ?

கதையும் நடையும் குரலும் நன்று !
படமும் தான் ! நல்வாழ்த்துகள்

நானானி said...

இந்த ஐடியா நல்லாருக்கே!!கை ஒடிய
டைப் செய்ய வேண்டாம். வாய் வலிக்கப் பேசினால் போதும்.ஹுஹுங்
வாய் எங்கே எப்போ வலிச்சது?
கதை சூப்பர். குழந்தையிடம் பதில் சொல்லத்தெரியாமல்..ங்ஏ என்று முழித்தது அதைவிட சூப்பர்!!!
கொக்குக்கு மதி ஒரே இடத்தில் என்பது போல் குழந்தைகளும் ஒரு வகை கொக்குதான். தாங்கள் நினைத்த பதில் வரும்வரை நம்மை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க!!
அவர்களோடு உரையாடுவது மனசுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருமே! புதுத்தேனீ!!!!!!!!அந்த மகிழ்ச்சியை
நிறைய அனுபவியுங்கள்!!
வாழ்த்துக்கள்!!குழந்தைக்கு என் அன்பு!!

Thamiz Priyan said...

///NewBee said...
வாங்க தமிழ் பிரியன்,
நலமா? :)
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க்க்க்க்க்க மகிழ்ச்சி :)
தொடர்ந்து வாங்க.முடிந்தால் தெரிந்த குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். நன்றி :)))///
என்னைப் பார்த்தா குழந்தையா தெரியலைக்கா! என்ன கொடும இது... யாருமே நம்ப மாட்டீங்களா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

ஹைய்யா எனக்குன்னு நிறைய கதைகள் சொல்ல போற பதிவுகளா இருக்கும்போல!

நான் இனிமே சாக்லேட்டே சாப்பிட மாட்டேன் நல்ல புள்ளையா சமர்த்தா இருப்பேன்!

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///NewBee said...
வாங்க தமிழ் பிரியன்,
நலமா? :)
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க்க்க்க்க்க மகிழ்ச்சி :)
தொடர்ந்து வாங்க.முடிந்தால் தெரிந்த குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். நன்றி :)))///
என்னைப் பார்த்தா குழந்தையா தெரியலைக்கா! என்ன கொடும இது... யாருமே நம்ப மாட்டீங்களா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்
///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த அங்கிள் போங்கு ஆட்டம் ஆடுறாருங்க யாரு நம்பாதீங்க :)

நந்து f/o நிலா said...

newbee சொன்னா நம்ப மாட்டீங்க. ஜிமெயில் தமிழ்மணத்தோடு வண்டு சிண்டுவையும் ஓப்பன் பண்ணி வைக்க வேண்டிதாகிவிட்டது தினமும்.ஒரு நாளைக்கு 5 தடவையாவது கூடவே தானும் சொல்லிகொண்டு பாக்குது நிலா :).

அதை அப்படியே ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்ப நினைத்தேன் :( . ப்ச் இன்னும் முடியல.

எப்படியோ இப்போ பாதி நேரம் சிஸ்டம் முன்னாடி நிலாதான். எனக்குத்தான் ஆப்பு :P

நந்து f/o நிலா said...

வாவ் வாவ் வாவ் இதுவும் அல்ட்டிமேட். கலக்கறீங்க. போறபோக்குல சும்மா செய்யாம நிறய முயற்சி எடுத்துக்கறீங்க போல. போட்டோஸ்ல தெரியுது.

சதங்கா (Sathanga) said...

புதுத்தேனீ !

வழக்கம் போல அடுத்த கலக்கல் கதை. தொடர்ந்து கதை படைக்க வாழ்த்துக்கள்.

// யாரு வாண்டு, யாரு சிண்டு-னு இன்னோருவாட்டி//

வண்டு என்று இருந்திருக்க வேண்டுமா ?

ராமலக்ஷ்மி said...

நாம சொன்னா புரியாத விஷயங்கள் கதையா சொல்லுகையில் புரியும். சாக்லேட் ப்ரிய குட்டீஸ்களும்,பெரியவர்களும் [நிஜமா நல்லவன், பெரியவங்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு. ஒரு சர்வே எடுத்துதான் பாருங்களேன்:)] இனி யோசிப்பாங்க.

நிலா மாதிரி எத்தனை குழந்தைகள் ஸிஸ்டம் முன்னாடியே நிற்கிறார்களோ...குட்டீஸ்களை ரசிகர்களாய் அடைய நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் புது வண்டு. வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்பையனுக்கு இந்த விண்டோவை க்ளோஸ் செய்யாம வச்சிட்டு பார்த்துட்டே இருக்கனுமாம்.. ஆனா என்னடா சொல்லுறாங்கன்னா மட்டும்...நான் அந்த ரூமுக்கு போறேங்கறான் ஏன்னா அவனுக்கு கதை புரியுது.. அவனால சாக்லேட் சாப்பிடாம முடியாது .. அதனால் கதையை பத்தி வாயத்திறக்கமாட்டேங்கறான்.:)

NewBee said...

வாங்க செல்வி அம்மா,

நலமா? :)

//குட்டியா இருந்துகிட்டு எவ்ளோ சாக்லேட் திங்கறது ? //

ஹி..ஹி..குட்டியா இருக்கும் போதுதான் , சாக்லேட் திங்கமுடியுது. அதான், அளவா சாப்பிட்டா, பெருசானப்புறமும் திங்கலாமுன்னு ஒரு ரோசனை :D

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா!

தொடர்ந்து வாங்க :))

NewBee said...

வாங்க வாங்க நானானி அம்மா,

நலமா? :)

ஒரு வாரம் வலைச்சரத்தில் ஒரே சரவெடியாய்த் தாக்கியிருந்தீர்கள். அதில் இருந்த ஹூயுமரை மிகவும் ரசித்தேன் :))

//ஹுஹுங்
வாய் எங்கே எப்போ வலிச்சது?
//

ஹி..ஹி..அது! ஒரே வித்தியாசம், இங்கே, தனியாப்பேச வேண்டும். வேறு யாரும் பேசினாக் கடுச்சு வச்சுறனும் :D :D.

//தாங்கள் நினைத்த பதில் வரும்வரை நம்மை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க!!
//

உண்மை அம்மா. சொல்லப்போனால் வண்டு அழுதது, என் பிள்ளைக்குப் பெரிய வருத்தம்.அம்மா! ஏன் வண்டை அழவைத்தாய் என மிகவும் வருந்தினான்.

பிறகு, கதையை, சற்று மைல்ட் ஆக்கினேன்- அடுத்த நாள் வண்டு நலம் அடைந்து, துள்ளி எழுந்தது எனும் இறுதிப்பாகம் ஒரு பிற்சேர்க்கை. அதன் பின் தான் பிள்ளை சிரித்தான்.

குழந்தைகளின் பார்வை வேறாக உள்ளது. அவர்கள் கருத்தும், இந்தக் கதைகளுக்கு மிகப் பெரிய பலம்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா :) தொடர்ந்து வாங்க.

NewBee said...

//என்னைப் பார்த்தா குழந்தையா தெரியலைக்கா! என்ன கொடும இது... யாருமே நம்ப மாட்டீங்களா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்
//

தமிழ் பிரியன்,

இது நியாயமா?. நான் உங்களுக்கு அக்காவா? சரி, பரவாயில்லை, ஒரு தம்பி கிடைத்ததில் மகிழ்ச்சி :))

உங்கள் நண்பர்களையும் தெரிந்த பெரியவர்களையும் கூட்டிக்கொண்டு வாங்க.சரியா? :P

NewBee said...

//ஆயில்யன் said... //

வாங்க ஆயில்யன்.

நலமா?

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி :)))

//ஹைய்யா எனக்குன்னு நிறைய கதைகள் சொல்ல போற பதிவுகளா இருக்கும்போல!//

நீங்களும் தமிழ் பிரியனும் ஒரு வகுப்புத் தோழர்களா? :)))

//நான் இனிமே சாக்லேட்டே சாப்பிட மாட்டேன் நல்ல புள்ளையா சமர்த்தா இருப்பேன்!
//

நீங்க எப்பவுமே சமர்த்துத்தான். அதே சமயம் சாக்லேட்டும் சாப்பிடலாம்ங்க. ஆனா அளவா. களவும் கற்று மற. சரிதானே.

(இது குழந்தைகள் கதையும் கூடத் தானே. அதான் அவர்களுக்குமான ஒரு சீரியஸ் பதில் :) )

NewBee said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த அங்கிள் போங்கு ஆட்டம் ஆடுறாருங்க யாரு நம்பாதீங்க :)
//

ஆஆஆஆஆஆஅ! தமிழ் பிரியன், என்னை அக்காங்குறார். அவரு உங்களுக்கு அங்கிளா??????....

நல்லா, சுத்திவிடுறீங்க.....:)))

மங்களூர் சிவா said...

ஹி ஹி பசங்களுக்கு சாக்லெட் கட் பண்ண இப்பிடி ஒரு டெக்னிக்கா நல்லா இருங்க அம்மிணி

:))))))))))

மங்களூர் சிவா said...

நல்லா இருந்தது கதை

மங்களூர் சிவா said...

எப்பவும் போல உங்க குரல் இனிமை. தொடருங்கள் உங்கள் சேவை.

NewBee said...

வாங்க நந்து, நிலா,

இருவரும் நலமா? :))))

நிலாக்குட்டியப் பாக்குறதுல இரட்டிப்பு மகிழ்ச்சி :)

//அதை அப்படியே ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்ப நினைத்தேன்//

காத்திருக்கிறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :). நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாகச் செய்யுங்கள்.

//எப்படியோ இப்போ பாதி நேரம் சிஸ்டம் முன்னாடி நிலாதான். //

:))).நிலாக்குட்டிக்கு அன்பு முத்தங்கள். இதைக்கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கின்றது.

நந்துவின் பொறுமைக்கு மிக்க நன்றி.

நிலாக்குட்டியின் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் கொடுத்துவைத்திருக்கின்றேன் :)

ரெண்டு பேரும் தொடர்ந்து வாங்க.மிக்க மகிழ்ச்சி.

NewBee said...

// நந்து f/o நிலா said...
வாவ் வாவ் வாவ் இதுவும் அல்ட்டிமேட். கலக்கறீங்க. //

நந்து! இந்த உற்சாகம் எனக்கு மிகப்பெரிய டானிக்.

பொறுப்பு கூடுவதும் தெரிகிறது :). மகிழ்ச்சி தான்.முழு முயற்சி எடுக்கிறேன்.

//போறபோக்குல சும்மா செய்யாம நிறய முயற்சி எடுத்துக்கறீங்க போல. போட்டோஸ்ல தெரியுது.
//

ம்ம்ம்..:). ஆமா! இப்போது எதைப்பார்த்தாலும், இது நம்ம கதைக்குப் பொருந்துமா என எண்ணத் தோன்றுதிறது. பக்கத்து 'பேக்கரி' கடையில், அனுமதி வாங்கி, சில படங்கள் எடுத்தேன் :))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நந்து, நிலா.

NewBee said...

//சதங்கா (Sathanga) said...
//

வாங்க சதங்கா,

நலமா? :))

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

வாண்டு வண்டு, மீண்டும் வண்டாகிவிட்டது.சீனா ஸார் மாதிரியே, நீங்களும் எனக்கு எத்தனை ஸ்டார் தருவீங்க :P

தொடர்ந்து வாங்க சதங்கா.மிக்க மகிழ்ச்சி.

பி.கு.:சீனா ஸார், இன்னும் என்க்கு ஸ்ரார் தரல :(

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
நாம சொன்னா புரியாத விஷயங்கள் கதையா சொல்லுகையில் புரியும். //

வாங்க வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

//[நிஜமா நல்லவன், பெரியவங்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு. ஒரு சர்வே எடுத்துதான் பாருங்களேன்:)]//

இது தெரியாதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ!

நி.ந.! சொல்லவே இல்ல :P. நிறைய சாக்லேட் சாப்பிட்டா, மான்ஸ்டர்(Monster) வந்து உங்க எல்லாப் பல்லையும் தூக்கிட்டு போயிடும் நி.ந. :D. அளவோட சாப்பிடுங்க சேரியா?

//நிலா மாதிரி எத்தனை குழந்தைகள் ஸிஸ்டம் முன்னாடியே நிற்கிறார்களோ...குட்டீஸ்களை ரசிகர்களாய் அடைய நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் புது வண்டு. வாழ்த்துக்கள்!
//

உண்மை ராமலக்ஷ்மி. நந்து/ நிலாவிற்கும் இதைத்தான் சொன்னேன். நிலாவும் கூடவே கதை சொல்கிறாள் எனக் கேட்கும் பொழுது, மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.

நிலாவுக்குப் பிடித்தம்மாய்க் கதை சொல்ல , இனிமேல் இன்னும் ஒழுங்காய் யோசிக்கிறேன்.

மிக்க நன்றி.

NewBee said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said... //

வாங்க கயலக்கா,

நலமா? குட்டீஸ் யாவரும் நலமா? :))

//என்பையனுக்கு இந்த விண்டோவை க்ளோஸ் செய்யாம வச்சிட்டு பார்த்துட்டே இருக்கனுமாம்..//

ஆஹா! உங்க பையன் உங்களுக்கும் மேல நல்லவனா இருக்கான். I Like it. :))

//ஆனா என்னடா சொல்லுறாங்கன்னா மட்டும்...நான் அந்த ரூமுக்கு போறேங்கறான் ஏன்னா அவனுக்கு கதை புரியுது.. அவனால சாக்லேட் சாப்பிடாம முடியாது .. அதனால் கதையை பத்தி வாயத்திறக்கமாட்டேங்கறான்.:)
//

ஹி...ஹி..கொஞ்சம் கொஞ்சமா நாங்க செய்வோம்.எங்கள யாருன்னு நினைச்சீங்க?, கயலம்மா பையனாக்கும் :)))))

தங்கள் வருகைக்கும், குட்டீஸ்களின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி அக்கா.

தொடர்ந்து வாங்க. இந்த விண்டோவைத் தொடர்ந்து திறந்து வைங்க :P

NewBee said...

//மங்களூர் சிவா said...
//

வாங்க சிவா,

நலமா? :))

//ஹி ஹி பசங்களுக்கு சாக்லெட் கட் பண்ண இப்பிடி ஒரு டெக்னிக்கா நல்லா இருங்க அம்மிணி
:))))))))))
//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இத்தன பேர்ல நீங்க கண்டுபிடிச்சுட்டீங்களா????????? :-0

//மங்களூர் சிவா said...
நல்லா இருந்தது கதை
//

நன்னி! நன்னி!

//மங்களூர் சிவா said...
எப்பவும் போல உங்க குரல் இனிமை. தொடருங்கள் உங்கள் சேவை.
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி சிவா. தொடர்ந்து வாங்க. :))

நந்து f/o நிலா said...

சொல்ல மறந்துட்டேன். இந்த கதையில் யாருக்குமே ஏன் ஸ்டார் கொடுக்கலன்னு நிலா கேக்குது. அடுத்த கதையில மறக்காம ஸ்டார் கொடுப்பது மாதிரி கொண்டு வந்துடுங்க.

என்னால நிலாகிட்ட விளக்கம் சொல்லி சொல்லி முடியல :)

NewBee said...

//நந்து f/o நிலா said...
சொல்ல மறந்துட்டேன். இந்த கதையில் யாருக்குமே ஏன் ஸ்டார் கொடுக்கலன்னு நிலா கேக்குது. அடுத்த கதையில மறக்காம ஸ்டார் கொடுப்பது மாதிரி கொண்டு வந்துடுங்க.

என்னால நிலாகிட்ட விளக்கம் சொல்லி சொல்லி முடியல :)

//

நந்து!

நிலாக்குட்டிக்கு சொல்லுங்க, கதை முடிந்ததும் ஒரு மஞ்சள் நிற, happy sun வருதில்லையா. அதைச் சுற்றி இருக்குற எல்லா ஸ்டாரும் கதைகேட்கும் நல்ல பிள்ளைகளுக்காகத்தான்னு. கை நீட்டி எல்லாம் பறிச்சுக்கச் சொல்லுங்க.

//அடுத்த கதையில மறக்காம ஸ்டார் கொடுப்பது மாதிரி கொண்டு வந்துடுங்க.
//

கண்டிப்பா. ஆனா இரண்டு கதைகளுக்குப் பிறகு :(. ஊருக்குப் போகிறேன் அதனால் இன்னும் இரு கதைகளுக்குப் பொறுத்துக்கொள்ள இயலுமா???. அதுவரை, நிலாச்செல்லத்தை, சமாளிக்க முடியுமா?

நன்றி நந்து.நீங்க க்ரேட் அப்பா,கண்டிப்பாச் செய்வீங்க :D.

blogger templates 3 columns | Make Money Online